உலக செய்திகள்

கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதனை: அமெரிக்க நிறுவனம் நடவடிக்கை

கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதனை செய்ய அமெரிக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தினத்தந்தி

கான்பெரா,

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த உயிரி தொழில்நுட்ப நிறுவனமான நோவாவேக்ஸ், தடுப்பூசியை கண்டறிந்ததாக தெரிவித்துள்ளது. அந்த தடுப்பூசியை ஆஸ்திரேலியாவில் மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதித்து வருவதாக நேற்று அறிவித்தது. மெல்போர்ன், பிரிஸ்பேன் ஆகிய நகரங்களில் முதல்கட்ட பரிசோதனை தொடங்கி உள்ளது.

இதன்மூலம், இந்த ஆண்டுக்குள் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும் என்று அந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு தலைவர் கிரிகோரி கிளன் தெரிவித்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு