உலக செய்திகள்

கோஸ்டா ரிக்கா நாட்டில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம் என அறிவிப்பு

கோஸ்டா ரிக்கா நாட்டில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சான் ஜோஸ்,

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், குழந்தைகளுக்கான தடுப்பூசியும் தற்போது பல்வேறு நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

அந்த வகையில் மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிக்காவில், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலகிலேயே முதல் முறையாக கோஸ்டா ரிக்காவில் தான் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 5.1 கோடி மக்கள் தொகையை கொண்ட கோஸ்டா ரிக்கா நாட்டில் இதுவரை கொரோனாவால் 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு ஏற்கனவே 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை 54 சதவீதத்திற்கும் அதிகமானோர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்