ஜெனீவா,
இந்தியாவில் முதன் முதலாக கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் டெல்டா வகை கொரொனா தடுப்பூசிகளுக்கு மட்டுப்படுமா? என்பது குறித்து பரவலாக சமூக வலைத்தளங்களிலும் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக பைசர் மற்றும் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் பாதுகாப்பை கொடுப்பதாக ஆய்வில் தெரிக்கப்பட்டுள்ளது. லான்செட் இதழில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்காட்லந்தில் இது குறித்த ஆய்வு நடந்துள்ளது. இதன்படி, பைசர் தடுப்பூசி ஆல்ஃபா வைரசுக்கு எதிராக 92 சதவிகிதம் பாதுகாப்பை கொடுக்கிறது. டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக 2-வது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு 73 சதவிகிதம் செயல் திறன் மிக்கதாக உள்ளது. அஸ்ட்ரா செனகா தடுப்பூசி டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக 60 சதவிகிதம் பாதுகாப்பை கொடுக்கிறது.