உலக செய்திகள்

அமெரிக்காவின் இணை அட்டானி ஜெனரலாக இந்திய வம்சாவளியைச் சோந்த வனிதா குப்தா நியமனம்

இந்திய வம்சாவளியைச் சோந்த வனிதா குப்தாவை, அமெரிக்காவின் இணை அட்டானி ஜெனரலாக நியமிக்கும் பரிந்துரை செனட் சபையில் வெற்றி பெற்றது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர், பல்வேறு உயர்மட்ட பதவிகளுக்கான அதிகாரிகளை அவர் பரிந்துரை செய்து வருகிறார். அந்த வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் அமெரிக்க அரசின் பல்வேறு உயர் பதவிகளுக்கு பரிந்துரைக்க்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்க நீதித் துறையின் 3வது உயரிய பதவியான இணை அட்டர்னி ஜெனரல் என்ற பதவிக்கு, இந்திய வம்சாவளியைச் சோந்த வனிதா குப்தாவை, அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்தார். இதுதொடாபாக அமெரிக்காவின் செனட் சபையில் புதன்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் வனிதா குப்தாவுக்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் பதிவாகின.

ஜோ பைடனின் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் 50 பேரும், அதிபரின் பரிந்துரையை ஆதரித்து வாக்களித்த நிலையில், எதிக்கட்சியான குடியரசு கட்சியைச் சோந்த உறுப்பினா லிசா மாகோவ்ஸ்கி, தனது கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாறாக வனிதா குப்தாவை ஆதரித்து வாக்களித்ததால், அவரது நியமனத்துக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தன.

இதனையடுத்து வனிதா குப்தாவை இணை அட்டர்னி ஜெனரலாக நியமிக்கும் பரிந்துரை வெற்றி பெற்றது. இதன் மூலம் அமெரிக்காவின் இணை அட்டர்னி ஜெனரலாகப் பதவி ஏற்கும் வெள்ளையர் அல்லாத முதல் நபர் என்ற பெருமையை வனிதா குப்தா பெற்றுள்ளார். தற்போது 46 வயதாகும் வனிதா குப்தா, மனித உரிமை வழக்கறிஞராக பணியாற்றி வருகிறா என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்