உலக செய்திகள்

வியட்நாமில் பைசர் தடுப்பூசிக்கு அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல்

வியட்நாமில் பைசர் தடுப்பூசியை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

தினத்தந்தி

வியட்நாம்,

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின், உலக நாடுகள் முழுவதும் பரவியது. தற்போது, உலகம் முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16. கோடியை தாண்டியுள்ளது.

இதனிடையே இந்த கொடிய வைரசை ஒழிப்பதற்கு தடுப்பூசி ஒன்று மட்டுமே தீர்வு என்பதை உணர்ந்த உலக நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் முழுவீச்சில் இறங்கின. தற்போது உலக ஆராய்ச்சியாளர்கள் போராடி, கொரோனாவுக்கெதிரான தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளனர். இதன்படி ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, அமெரிக்காவின் மாடர்னா, இந்தியாவின் கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட பல தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், வியட்நாமில் ஏற்கனவே சீனாவின் சினோபார்ம், ரஷியாவின் ஸ்புட்னிக் மற்றும் இங்கிலாந்தின் ஆஸ்ட்ரா ஜெனகா ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்