உலக செய்திகள்

தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதிகரிக்கும் பணவீக்கம் ஆகியவற்றுக்கு பிரதமா இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் ஆட்சிதான் காரணம் என குற்றம்சாட்டி, இம்ரான்கானுக்கு எதிராக எதிக்கட்சிகள் நம்பிக்கையில்லா தீமானம் கொண்டு வந்துள்ளன.

ஆளும் கட்சியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட உறுப்பினாகள் இம்ரான்கானுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் அவரது ஆட்சி கவிழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக கூறி பிரதமர் இம்ரான்கானுக்கு அந்த நாட்டு தேர்தல் ஆணையம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

கைபர் பக்துங்வா மாகாணத்தின் உள்ளாட்சி தேர்தலையொட்டி கடந்த 16-ந்தேதி அங்குள்ள ஸ்வாட் நகரில் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் இம்ரான்கான் மற்றும் மந்திரிகள் பலர் பங்கேற்றனர்.

இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் பிரதமர் இம்ரான்கான் மற்றும் மந்திரிகள் 5 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை