உலக செய்திகள்

ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை - மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றம்

எரிமலை வெடிப்புக்கு முன்பாக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி

ரெய்க்ஜேன்ஸ்,

உலகின் 18வது பெரிய தீவாக, வடக்கு அட்லாண்டிக் கடலில் அமைந்திருக்கிறது ஐஸ்லாந்து நாடு. இந்த நாட்டின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை வெடித்து சிதற தொடங்கியுள்ளது. கிரின்டாவிக் நகரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த எரிமலை நேற்று இரவு ஆக்ரோஷத்துடன் வெடிக்க தொடங்கி தீப்பிழம்பை கக்கி வருகிறது. கடந்த ஒரு வாரமாக குமுறிக் கொண்டிருந்த நிலையில் நேற்று வெடித்து சிதறியுள்ளது.

எரிமலை வெடிப்பு காரணமாக கிரின்டாவிக் பகுதியில் வசிக்கும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எரிமலை வெடிப்புக்கு சில மாதங்களுக்கு முன்பு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பகத்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்