உலக செய்திகள்

அமைதி முயற்சிகளை இந்தியா நிராகரிக்கிறது: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சொல்கிறார்

அமைதி முயற்சிகளை இந்தியா நிராகரிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

இஸ்லமாபாத்,

துருக்கி நாட்டைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இம்ரான்கான் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- இந்தியாவும், பாகிஸ்தானும் அணுசக்தி நாடுகளாகும். இந்த இருநாடுகளும் போர் குறித்தோ அல்லது மறைமுக போர் குறித்தோ சிந்தித்து பார்க்கக் கூடாது.

ஏனெனில், இது நிலைமையை மேலும் மோசமாக்கி விடும்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு அமைதி பேச்சு ஒன்றுதான் சிறந்த வழியாகும். அணுசக்தி திறன் கொண்ட இருநாடுகளும் போரிடுவது, சம்பந்தப்பட்ட இருநாடுகளும் தற்கொலை செய்து கொள்வதற்கு சமமாகும்.

இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாகும். ஆனால் எனது முயற்சிகளை இந்தியா நிராகரிக்கிறது. காஷ்மீர் மக்களின் உரிமைகளை இந்தியாவால் ஒருபோதும் ஒடுக்க முடியாது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்