Image Courtesy : Twitter @AidaGreenbury 
உலக செய்திகள்

நீருக்கு அடியில் உலகின் மிகப்பெரிய தாவரத்தை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் - வைரல் வீடியோ

இந்த தாவரம் மன்ஹாட்டன் தீவை விட மூன்று மடங்கு பெரியதாகும்.

தினத்தந்தி

சிட்னி,

மேற்கு ஆஸ்திரேலியாவில் நீருக்கடியில் வளரும் உலகின் மிகப்பெரிய தாவரத்தை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ஷார்க் விரிகுடாவில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தாவரம் சுமார் 200 சதுர கிமீ பரப்பளவில் விரிந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது விரிந்திருக்கும் மேற்பரப்பு கிளாஸ்கோ நகரத்தை விட சற்றே பெரியது எனவும் மன்ஹாட்டன் தீவை விட மூன்று மடங்கு பெரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் இந்த செடியை பார்க்கும் போது அது ஒரு பெரிய கடல் புல்வெளி என்று நம்பியதாகவும் , ஆனால் அது ஒரு விதையில் இருந்து பரவிய தாவரம் என அறிவியல் சோதனையில் தாங்கள் கண்டறிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாவரத்தின் வளர்ச்சியை பார்த்தால் இந்த தாவரம் சுமார் 4,500 ஆண்டுகளாக வளர்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை