உலக செய்திகள்

நாம் எதிர் எதிர் கட்சி தான் எதிரிகள் கிடையாது -ஜோ பிடன்

நாங்கள் எதிர் எதிர் கட்சியாக இருக்கலாம், ஆனால் எதிரிகள் கிடையாது என ஜோபிடன் குறிபிட்டு உள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்

ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் வெற்றியை நெருங்கும் வேளையில் டுவிட்டரில் முக்கிய பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெறும் நிலையில் ஜோ பைடன் வெற்றியை நெருங்கி கொண்டிருக்கிறார்.ஆனால் வாக்கு எண்ணிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன் என குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் கூறி வருகிறார்.

இருவரும் இப்படி மறைமுகமாக மோதி வரும் நிலையில் டுவிட்டரில் ஜோ பிடன் நாங்கள் எதிர் எதிர் கட்சியாக இருக்கலாம், ஆனால் எதிரிகள் கிடையாது, நாம் அமெரிக்கர்கள். நம்முடைய அரசியலின் நோக்கம் முற்றிலும் இடைவிடாத போர் கிடையாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்