உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானுடன் நேர்மறையான ஈடுபாடு வேண்டும்” - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

ஆப்கானிஸ்தானுடன் நேர்மறையான ஈடுபாட்டை சர்வதேச நாடுகள் கொண்டிருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கேட்டுக்கொண்டுள்ளார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஐ.நா. உலகளாவிய உணவு திட்டத்தின் செயல் இயக்குனர் டேவிட் பீஸ்லியை, அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கான் நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர்கள், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தொடர்ந்து மனிதாபினமான உதவிகளை வழங்குவது தொடர்பான வழிவகைகளை ஆலோசித்தனர்.

மேலும், தலீபான்கள் வசமாகி விட்ட ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசு அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வலியுறுத்தினார்.

எந்தவொரு மனிதாபிமான நெருக்கடியையும் தவிர்ப்பதற்கும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் ஒரு வழியாக ஆப்கானிஸ்தானுடன் நேர்மறையான ஈடுபாட்டை சர்வதேச நாடுகள் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்