உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு வெண்டிலேட்டர் வழங்குவோம்; டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் பாகிஸ்தானுக்கு வெண்டிலேட்டர் வழங்குவோம் என பேட்டியில் கூறியுள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்பொழுது, வெண்டிலேட்டர் (செயற்கை சுவாச கருவி) தேவைப்படும் உலக தலைவர்களுடன் நான் பேசினேன். அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய அமெரிக்கா உதவும் என்று கூறினேன். அந்த வகையில், பாகிஸ்தானுக்கு வெண்டிலேட்டர் அனுப்பி வைப்போம்.

இதேபோன்று ஸ்பெயின், இத்தாலி, மெக்சிகோ, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் வெண்டிலேட்டர்கள் அனுப்பி வைப்போம் என அவர் கூறினார். பாகிஸ்தானுக்கு வெண்டிலேட்டர் இலவசமாக கொடுக்கப்படுகிறதா? அல்லது விலைக்கு அளிக்கப்படுகிறதா? என்பது பற்றி அவர் எதுவும் கூறவில்லை.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை