மாஸ்கோ,
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரானது 3 ஆண்டுகளை கடந்து 4-ம் ஆண்டையும் நிறைவடைய உள்ள சூழலில் உள்ளது. இந்த போரில் ரஷியா எப்போது வெற்றி பெறும் என நிருபர் ஒருவர் கேட்டபோது, அதற்கு ரஷிய பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் பதிலளித்து உள்ளார்.
அவர் அளித்த பேட்டியின்போது, உக்ரைன் போரில் ராணுவ ரீதியாக நாங்கள் விரைவில் வெற்றி பெறுவோம். ஆனால் முக்கிய விசயம் என்னவென்றால், அடுத்து எந்த மோதலும் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதே ஆகும் என்றார்.
இதனால், போரில் ரஷியா வெற்றி பெற்றால், போர் முடிவுக்கு வர கூடும் என தெரிகிறது. ஆனால், வெற்றியை முடிவு செய்யும் விசயங்களை பற்றிய தகவல் வெளிவரவில்லை.
ரஷியாவில் 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை ரஷிய ஜனாதிபதியாகவும் பதவி வகித்த மெத்வதேவ் கூறும்போது, ரஷியாவின் வெற்றி விரைவில் நிகழ வேண்டும் என விரும்புகிறேன்.
ஆனால், அடுத்து என்ன நடக்கும் என்றும் சிந்திப்பது மிக முக்கியம். வெற்றியின் இலக்கானது புதிய மோதல்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் இருக்க வேண்டும். இதுவே தெளிவான விசயம் என்று கூறினார்.