உலக செய்திகள்

வடகொரியா உடன் பேச்சுவார்த்தை எப்போது? அமெரிக்கா தகவல்

தென்கொரியாவில் கடந்த மாத இறுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், யாரும் எதிர்பாராதவிதமாக கொரிய எல்லையில் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேசினார்.

தினத்தந்தி

நியூயார்க்,

உலகையே திரும்பி பார்க்கவைத்த இந்த சந்திப்பின்போது அணு ஆயுத விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது என இருநாட்டு தலைவர்களும் உறுதிபூண்டனர். ஆனால் இந்த சந்திப்பு நடந்து 3 வாரங்களுக்கு மேலாகியும் இன்னும் இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை.

இந்த நிலையில் அடுத்த 2 வாரங்களுக்குள் வடகொரியா உடனான பேச்சுவார்த்தை தொடங்கும் என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து அவர் கூறியதாவது:

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக வடகொரியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தை 2 வாரங்களில் தொடங்கும் என நம்பிக்கை உள்ளது. வடகொரியா அணுஆயுதமற்ற நாடாக மாற்றப்படும் என அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் அன் உறுதி அளித்துள்ளார். அந்த வாக்குறுதியை அவர் எழுத்துப்பூர்வமாக கொடுக்கவில்லை. ஜனாதிபதி டிரம்பிடம் நேரடியாக தெரிவித்துள்ளார். எனவே அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அந்நாட்டு மக்களுக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது