உலக செய்திகள்

கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு கவலை

கொரோனோ வைரஸ் பாதிப்பால் கடந்த ஒரு வாரத்தில் இறப்பு விகிதம் இரு மடங்காகியுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் , தற்போது உலகம் முழுவதையும் விழிபிதுங்க வைத்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 190 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 935,840-பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47,241 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து 194,286 மீண்டுள்ளனர்.

இதற்கிடையில் கெரேனாவால் நிகழ்ந்த உயிரிழப்புகள் கடந்த ஒரே வாரத்தில் இரட்டிப்பானது பெரும் கவலை தருவதாக சர்வதேச சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதோனம் கெப்ரிசிஸ், கெரேனா ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அடுத்த ஒருவாரத்தில் உலகளவில் கெரோனா நோய்த் தொற்று பாதிப்பு 10 லட்சத்தை தொடும். உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக உயரும் என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்