இதை ஆய்வு செய்து வரும் உலக சுகாதார நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து கூடுதல் தகவல்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடம் பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், உலக சுகாதார நிறுவனத்திடம் 90 சதவீத ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதாகவும், மீதி ஆவணங்கள் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.
கோவேக்சினை ஏற்கனவே 11 நாடுகள் அங்கீகரித்துள்ளன.