காத்மாண்டு
அமைச்சர் ஒற்றைச் சீனக்கொள்கையை நேபாளம் ஏற்றுக்கொள்வதையும் பாராட்டினார். சீன அமைச்சர் கோங் சுவாங்க்யூவும் நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் சங்கர்தாஸ் பைராகியும் சந்தித்து பேச்சுவார்த்தையின் போது இவ்வாறு அவர் கூறினார்.
நேபாளத்தின் உள்விவகாரங்களில் சீனா தலையிடுவதில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மறைமுகமாக இந்தியா அவ்வாறு தலையிடுகிறது என்பதே இதன் பொருள். 1955 ஆம் ஆண்டில் தூதரக உறவு துவங்கப்பட்டதிலிருந்து சீனாவும், நேபாளமும் ஒருவருக்கொருவர் மதிப்பும், மரியாதையும் கொண்டுள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.
இரு நாடுகளும் பஞ்சசீலக் கொள்கைகளின் அடிப்படையில் நட்புறவு கொண்டுள்ளதாக கூறினார்.
சமீபத்தில் சீனாவின் ஒன் பெல்ட் ஒன் ரோட் திட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது நேபாளம்.