ஹாரி-மேகன் தம்பதி 
உலக செய்திகள்

ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்பத்துக்கு திரும்புவார்களா? பக்கிங்ஹாம் அரண்மனை விளக்கம்

உலகிலேயே சக்தி வாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் கடந்த ஆண்டு தொடக்கத்தில் விலகினர்.‌

தினத்தந்தி

இதனை ஏற்றுக்கொண்ட அரச குடும்பம் ஓராண்டுக்குப் பிறகு நிலைமை மதிப்பாய்வு செய்யப்படும் என அறிவித்தது. ஹாரி மேகன் தம்பதி தற்போது தங்களது ஒன்றரை வயது மகன் ஆர்ச்சியுடன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகின்றனர். மேகன் 2-வது முறையாக கர்ப்பமாகி இருக்கிறார்.

இந்தநிலையில் இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் அரச குடும்பத்திலிருந்து விலகி ஓராண்டை கடந்து விட்ட நிலையில் அவர்கள் மீண்டும் அரச குடும்பத்தின் பொறுப்புகளுக்கு திரும்ப மாட்டார்கள் என்பதை பக்கிங்ஹாம் அரண்மனை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இளவரசர் ஹாரி தனது கவுரவ ராணுவ பட்டங்களை கைவிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?