உலக செய்திகள்

எந்த அறிகுறியும் இல்லாமல் சீனாவில் மேலும் 23 பேருக்கு கொரோனா

எந்த அறிகுறியும் இல்லாமல் சீனாவில் மேலும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீஜிங்,

சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 196 நாடுகளில் பரவியுள்ள கொரோனா, மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப்போட்டுள்ளது.

கொரோனா வைரஸ் முதன் முதலாகக் கண்டறியப்பட்ட சீனாவில் இந்த நோய்த்தொற்று கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டு வந்தபோதிலும் அவ்வப்போது கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சீனாவில், எந்த அறிகுறியும் இல்லாமல் மேலும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 19 பேர் உகான் நகரை சேர்ந்தவர்கள் ஆவர். அறிகுறிகளுடன் 2 பேருக்கு கொரோனா தாக்கி உள்ளது. இருவருமே வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் ஆவர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு