உலக செய்திகள்

வளரும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிக்கு ரூ.90 ஆயிரம் கோடி: உலக வங்கி ஒப்புதல்

வளரும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிக்கு ரூ.90 ஆயிரம் கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

வாஷிங்டன்,

வளர்ந்து வரும் நாடுகள், தங்கள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு உலக வங்கி 12 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.90 ஆயிரம் கோடி) நிதி உதவி வழங்குகிறது. 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு உதவும் வகையில் உலக வங்கி இதற்கான அனுமதியை அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக வளரும் நாடுகள் போராடுவதற்காக உலக வங்கி வழங்க முடிவு செய்துள்ள 160 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.12 லட்சம் கோடி) நிதி உதவியின் ஒரு பகுதி இதுவாகும்.

உலக வங்கியின் கொரோனா நெருக்கடி கால பதிலளிப்பு திட்டம், ஏற்கனவே 111 நாடுகளை சென்று அடைந்துள்ளது.

இதுபற்றி உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் அவசர நிலைக்கு தீர்வு காண எங்களது விரைவான அணுகுமுறையை நாங்கள் விரைவுபடுத்துகிறோம். வளரும் நாடுகளுக்கு தடுப்பூசி நியாயமாகவும், சமமாகவும் கிடைப்பதற்காக இதைச்செய்கிறோம் என கூறி உள்ளார்.

உலக வங்கியின் தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனமான சர்வதேச நிதிக்கழகம், தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.30 ஆயிரம் கோடி) உலகளாவிய சுகாதார தளம் மூலம் முதலீடு செய்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்