உலக செய்திகள்

தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு: உலக வங்கி பாராட்டு

கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோகத்தில் சர்வதேச அளவில் பங்காற்றிய இந்தியாவுக்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அமெரிக்கா சென்றுள்ளார். அவர் வாஷிங்டனில் உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ்சை நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் பருவநிலை மாற்ற பிரச்சினையில் இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.

இந்தியாவில் செயல்படுத்தி வரும் கொரோனா தடுப்பூசி திட்டத்துக்காக நிர்மலா சீதாராமனிடம் உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ் பாராட்டு தெரிவித்தார். தடுப்பூசி உற்பத்தியிலும், வினியோகத்திலும் இந்தியாவின் சர்வதேச பங்களிப்புக்கு அவர் நன்றியும் தெரிவித்துக்கொண்டார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நாடான இந்தியா, கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா சமீபத்தில் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?