உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியாவில் ரூ.31,850 கோடி பதுக்கினாரா? புதிய சர்ச்சை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியாவில் சட்ட விரோதமாக 4.9 பில்லியன் டாலர் பணத்தை (சுமார் ரூ.31 ஆயிரத்து 850 கோடி) பதுக்கியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், சட்ட விரோதமாக 4.9 பில்லியன் டாலர் பணத்தை (சுமார் ரூ.31 ஆயிரத்து 850 கோடி) இந்தியாவில் குவித்து உள்ளதாக ஊடகங்களில் பரபரப்பு தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு தேசிய பொறுப்புடைமை முகமை உத்தரவிட்டு உள்ளது.பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் அப்பாசி, தேசிய புலனாய்வு முகமை வரம்பு மீறி செயல்படுகிறது என சாடினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு குழு அமைத்து, தேசிய புலனாய்வு முகமை தலைவருக்கு சம்மன்

அனுப்பி விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதே ரீதியில் தேசிய புலனாய்வு முகமை செயல்பட்டால், இந்த நாடு தொடர்ந்து செயல்பட முடியாது. தேசிய புலனாய்வு முகமையின் சட்டத்தை நாடாளுமன்றம் திருத்துவதற்கு உரிய வேளை வந்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு இடையே நவாஸ் ஷெரீப், இந்தியாவில் சட்ட விரோதமாக பணம் குவித்து உள்ளதாக வெளியாகி உள்ள தகவல்களை உலக வங்கி மறுத்து உள்ளது.

இதுபற்றி உலக வங்கி வெளியிட்டு உள்ள அறிக்கையில், உலக வங்கியின் குடிபெயர்வு மற்றும் பணம் அனுப்பும் குழு அறிக்கை என்பது, உலகமெங்கும் உள்ள குடிபெயர்வுகள், பணம் அனுப்பும் நபர்களின் எண்ணிக்கையை தெரிவிப்பதற்கு உலக வங்கி எடுத்துக்கொண்டு உள்ள முயற்சி ஆகும். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், சட்டவிரோதமாக இந்தியாவில் 4.9 பில்லியன் டாலர் பணத்தை குவித்து உள்ளதாக வந்து உள்ள தகவல்கள் சரியானவை அல்ல. இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. தனிப்பட்ட நபர்களின் பெயர்களும்

அறிக்கையில் இடம் பெறவில்லை என கூறப்பட்டு உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை