உலக செய்திகள்

நாசி வழியாக செலுத்தப்படும் உலகின் முதல் கொரோனா தடுப்பூசி!

நாசி வழியாக செலுத்தப்படும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரஷியா பதிவு செய்துள்ளது.

தினத்தந்தி

மாஸ்கோ,

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மாஸ்கோவில் உள்ள கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது.

ரஷியா உட்பட 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. நம் நாட்டில் ரஷியாவின் ஸ்புட்னிக் - வி தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உபயோகிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

கடந்த ஆண்டு அக்டோபரில், நாசி வ்ழியாக பயன்படுத்தும் ஸ்ப்ரே வடிவ தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கான அங்கீகாரத்தை ரஷிய சுகாதார அமைச்சகம் கமலேயா மையத்திற்கு வழங்கியது.

கடந்த ஜனவரி மாதத்தில், கமலேயா மையத்தின் இயக்குனர், அலெக்சாண்டர் ஜின்ட்ஸ்பர்க் பேசும்போது, நாசி வழியாக செலுத்தும் தடுப்பூசி மூன்று முதல் நான்கு மாதங்களில் கிடைக்கும் என்றார். அதன்படி இப்போது இந்த தடுப்பூசி, பொதுமக்கள் பயன்படுத்த பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், நாசி வழியாக செலுத்தப்படும் உலகின் முதல் கொரோனா தடுப்பூசியாக இது தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தடுப்பூசி ஒமைக்ரானை எதிர்த்து திறம்பட நோயெதிர்ப்பாற்றலை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்