நியூயார்க்,
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோர தண்டவம் ஆடும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. உலக அளவில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்த நிலையில், உலக அளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 6 லட்சத்து 54 ஆயிரத்தை கடந்துள்ளது.
உலக அளவில் மேலும் 1,24,534 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1,65,35,494 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா வைரசால் 2,200 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை தற்போது 6,54,081 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,01,27,507 பேர் குணமடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும் (பாதிப்பு - 43,97,166 பேர், உயிரிழப்பு - 1,50,047 பேர்) இரண்டாவது இடத்தில் பிரேசிலும் (பாதிப்பு - 24,23,798 பேர், உயிரிழப்பு - 87,131 பேர்), மூன்றாவது இடத்தில் இந்தியாவும் (பாதிப்பு - 14,82,158 பேர், உயிரிழப்பு - 33,448 பேர்) உள்ளன. நான்காவது இடத்தில் ரஷ்யாவும் (பாதிப்பு - 8,18,120 பேர், உயிரிழப்பு - 13,354 பேர்) உள்ளன.