நியூயார்க்,
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோர தண்டவம் ஆடும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. உலக அளவில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்த நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 3,45,068 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 54,52,471 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,80,809 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவுக்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால், சமூக விலகலை பின்பற்றுவதன் மூலமே கொரோனா தொற்று சங்கிலியை உடைக்க முடியும் என்று வல்லுநர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், இந்தியா உள்பட பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன.
உலக அளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 98,824 பேரும், இங்கிலாந்தில் 36,793 பேரும், இத்தாலியில் 32,785 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.