உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 47½ லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 47½ லட்சத்தை தாண்டியுள்ளது.

நியூயார்க்,

உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை நேற்று மாலை நிலவரப்படி 47 லட்சத்து 70 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் 3 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.

உலகிலேயே அதிகம் பாதிப்புக்குள்ளான நாடு என்ற பெயரை அமெரிக்கா தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டுள்ளது. அங்கு இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டி விட்டது. அங்கு இந்த நோய் பலி கொண்டவர்களின் எண்ணிக்கையும் 90 ஆயிரத்தை கடந்துள்ளது.

2 லட்சத்துக்கும் அதிகமான அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் ரஷியா, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரேசில் உள்ளன.

இந்த தரவுகள், அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல் கலைக்கழக கொரோனா தரவு மையம் வெளியிட்டவை ஆகும்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்