கோப்புப்படம் 
உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20.40 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18.32 கோடியாக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20.40 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 20,40,97,606 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18,32,75,519 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 43 லட்சத்து 15 ஆயிரத்து 486 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,65,06,601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 99,081 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 3,67,79,522, உயிரிழப்பு - 6,33,797, குணமடைந்தோர் - 2,99,21,980

இந்தியா - பாதிப்பு - 3,19,97,017, உயிரிழப்பு - 4,28,715, குணமடைந்தோர் - 3,11,73,383

பிரேசில் - பாதிப்பு - 2,01,78,143, உயிரிழப்பு - 5,63,707, குணமடைந்தோர் - 1,89,39,051

ரஷ்யா - பாதிப்பு - 64,69,910, உயிரிழப்பு - 1,65,650, குணமடைந்தோர் - 57,69,981

பிரான்ஸ் - பாதிப்பு - 63,10,933 உயிரிழப்பு - 1,12,288, குணமடைந்தோர் - 57,77,842

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

இங்கிலாந்து - 60,94,243

துருக்கி - 59,42,271

அர்ஜெண்டினா- 50,29,075

கொலம்பியா - 48,43,007

ஸ்பெயின் - 46,27,770

இத்தாலி - 44,00,617

ஈரான் - 41,99,537

ஜெர்மனி - 38,00,048

இந்தோனேசியா- 36,86,740

மெக்சிகோ - 29,71,817

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்