கோப்புப்படம் 
உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.22 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20.88 கோடியாக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.22 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 23,22,76,713 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20,88,85,597 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 47 லட்சத்து 57 ஆயிரத்து 299 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,86,33,817 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 95,384 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 4,37,25,604, உயிரிழப்பு - 7,06,058, குணமடைந்தோர் - 3,31,62,044

இந்தியா - பாதிப்பு - 3,36,51,221, உயிரிழப்பு - 4,46,948, குணமடைந்தோர் - 3,28,94,762

பிரேசில் - பாதிப்பு - 2,13,43,304, உயிரிழப்பு - 5,94,246, குணமடைந்தோர் - 2,03,33,908

இங்கிலாந்து - பாதிப்பு - 76,31,233, உயிரிழப்பு - 1,36,105, குணமடைந்தோர் - 61,59,135

ரஷ்யா - பாதிப்பு - 73,98,415, உயிரிழப்பு - 2,03,095, குணமடைந்தோர் - 65,90,933

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

துருக்கி - 70,13,639

பிரான்ஸ் - 69,89,613

ஈரான் - 55,19,728

அர்ஜெண்டினா- 52,49,840

கொலம்பியா - 49,50,253

ஸ்பெயின் - 49,46,601

இத்தாலி - 46,57,215

இந்தோனேசியா- 42,06,253

ஜெர்மனி - 42,00,990

மெக்சிகோ - 36,28,812

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்