உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,62,00,326ஆக உயர்வு

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,62,00,326ஆக உயர்ந்தது.

வாஷிங்டன்,

உயிர்க்கொல்லி வைரசான கொரோனா, உலகம் முழுவதும் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து நீடிக்கிறது.

அதற்கு அடுத்த நிலையில் பிரேசில், இந்தியா, ரஷியா, தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ, பெரு, சிலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் போன்ற நாடுகள் உள்ளன.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி,

இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 1 கோடியே 62 லட்சத்து 59 326ஆக உயர்ந்துள்ளது.

வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 99,13,072ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்து 440ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் அதிகபட்சமாக 43 லட்சத்து 15 ஆயிரத்து 709 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,49,398ஆக உயர்ந்துள்ளது. 99 லட்சத்து 7 ஆயிரத்து 432 பேர் மீண்டுள்ளனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை