ஜெனிவா,
சீனாவில் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 17 லட்சத்து 64 ஆயிரத்து 465 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2 கோடியே 33 லட்சத்து 71 ஆயிரத்து 773 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 74 ஆயிரத்து 582 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 74 லட்சத்து 18 ஆயிரத்து 110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 989 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா - பாதிப்பு - 70,97,865, உயிரிழப்பு - 2,05,471, குணமடைந்தோர் - 43,46,098
இந்தியா - பாதிப்பு - 56,40,496, உயிரிழப்பு - 90,021, குணமடைந்தோர் - 45,81,820
பிரேசில் - பாதிப்பு - 45,95,335, உயிரிழப்பு - 1,38,159, குணமடைந்தோர் - 39,45,627
ரஷியா - பாதிப்பு - 11,15,810, உயிரிழப்பு - 19,649, குணமடைந்தோர் - 9,17,949
கொலம்பியா - பாதிப்பு - 7,77,537, உயிரிழப்பு - 24,570, குணமடைந்தோர் - 6,50,801