கோப்புப்படம் 
உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.96 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.31 கோடியை தாண்டியது.

தினத்தந்தி

ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18.96 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 18,96,99,239 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17,31,28,624 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 40 லட்சத்து 82 ஆயிரத்து 591 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 12,488,024 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 79,227 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 3,48,86,201, உயிரிழப்பு - 6,24,189, குணமடைந்தோர் - 2,93,41,802

இந்தியா - பாதிப்பு - 3,10,25,875, உயிரிழப்பு - 4,12,563, குணமடைந்தோர் - 3,01,76,306

பிரேசில் - பாதிப்பு - 1,92,62,518 உயிரிழப்பு - 5,39,050, குணமடைந்தோர் - 1,79,17,189

ரஷ்யா - பாதிப்பு - 58,82,295, உயிரிழப்பு - 1,46,069, குணமடைந்தோர் - 52,78,976

பிரான்ஸ் - பாதிப்பு - 58,33,341, உயிரிழப்பு - 1,11,429, குணமடைந்தோர் - 56,54,902

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

துருக்கி - 55,07,455

இங்கிலாந்து - 52,81,098

அர்ஜெண்டினா- 47,19,952

கொலம்பியா - 45,83,442

இத்தாலி - 42,78,319

ஸ்பெயின் - 40,69,162

ஜெர்மனி - 37,48,367

ஈரான் - 34,64,055

போலந்து - 28,81,151

இந்தோனேசியா- 27,26,803

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது