உலக செய்திகள்

உலக அளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.43 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2.43 கோடியாக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

ஜெனிவா,

சீனாவில் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 43 லட்சத்து 22 ஆயிரத்து 327 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 68 லட்சத்து 49 ஆயிரத்து 335 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 28 ஆயிரத்து 876 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 66 லட்சத்து 44 ஆயிரத்து 116 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 863 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு - 59,99,577, உயிரிழப்பு - 1,83,639, குணமடைந்தோர் - 32,96,299

பிரேசில் - பாதிப்பு - 37,22,004, உயிரிழப்பு - 1,17,756, குணமடைந்தோர் - 29,08,848

இந்தியா - பாதிப்பு - 33,07,749, உயிரிழப்பு - 60,629, குணமடைந்தோர் - 25,23,443

ரஷியா - பாதிப்பு - 9,70,865, உயிரிழப்பு - 16,683, குணமடைந்தோர் - 7,86,150

தென் ஆப்பிரிக்கா - பாதிப்பு - 6,15,701, உயிரிழப்பு - 13,502, குணமடைந்தோர் - 5,25,242

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்