உலக செய்திகள்

உலகமெங்கும் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 46 லட்சத்தை கடந்தது

உலகமெங்கும் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை தற்போது 46 லட்சத்தை கடந்துள்ளது.

வாஷிங்டன்,

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தென்பட்ட கொரோனா வைரஸ் தொற்று, கிட்டத்தட்ட உலகின் 200 நாடுகளில் பரவி விட்டது.

இந்நிலையில் உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை தற்போது 46,92,060 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வைரஸ் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கையும் 3,11,160 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 18,01,979 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

அமெரிக்காவில் 14 லட்சத்து 97 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், ஸ்பெயினில் 2 லட்சத்து 76 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், ரஷியாவில் 2 லட்சத்து 72 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், இங்கிலாந்தில் 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...