கோப்புப்படம் 
உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8.50 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.02 கோடியாக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

ஜெனீவா,

உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,02,03,458 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,50,06,910 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24 லட்சத்து 33 ஆயிரத்து 929 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,27,62,619 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 96,711 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகளின் விவரம்:-

அமெரிக்கா - பாதிப்பு- 2,83,87,105, உயிரிழப்பு - 5,00,180, குணமடைந்தோர் -1,84,82,432

இந்தியா - பாதிப்பு- 1,09,49,301, உயிரிழப்பு - 1,56,033, குணமடைந்தோர் -1,06,54,146

பிரேசில் - பாதிப்பு - 99,21,981, உயிரிழப்பு - 2,40,983, குணமடைந்தோர் - 8,883,191

ரஷ்யா - பாதிப்பு - 41,12,151, உயிரிழப்பு - 81,446, குணமடைந்தோர் - 36,42,582

இங்கிலாந்து - பாதிப்பு - 40,71,185, உயிரிழப்பு - 1,18,933, குணமடைந்தோர் - 22,31,199

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு