ஜெனீவா,
உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.
இந்த சூழலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் 8 ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரசான வி.யு.ஐ. 202012/01, 70 சதவீதம் அதிவேகமாக பரவுகிற தன்மையை கொண்டுள்ளதால் சூப்பர் ஸ்பிரெடர் என அழைக்கப்படுகிறது. இது கொத்து, கொத்தாக மக்களுக்கு பரவுகிற தன்மையை கொண்டிருக்கிறது.
இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 8,07,10,850 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5,68,99,243 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 லட்சத்து 64 ஆயிரத்து 374 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 2,20,47,233 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,05,611 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா - பாதிப்பு- 1,94,33,847, உயிரிழப்பு - 3,39,921, குணமடைந்தோர் -1,14,10,501
இந்தியா - பாதிப்பு- 1,01,88,392, உயிரிழப்பு - 1,47,659, குணமடைந்தோர் - 97,60,848
பிரேசில் - பாதிப்பு - 74,65,806, உயிரிழப்பு - 1,90,815, குணமடைந்தோர் - 64,75,466
ரஷ்யா - பாதிப்பு - 30,21,964, உயிரிழப்பு - 54,226, குணமடைந்தோர் - 24,26,439
பிரான்ஸ் - பாதிப்பு - 25,50,864, உயிரிழப்பு - 62,573, குணமடைந்தோர் - 1,89,718
தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-
இங்கிலாந்து - 22,56,005
துருக்கி - 21,33,373
இத்தாலி - 20,38,759
ஸ்பெயின் -18,69,610
ஜெர்மனி - 16,43,169
கொலம்பியா - 15,84,903
அர்ஜென்டினா - 15,78,267
மெக்சிகோ - 13,72,243
போலந்து - 12,53,957
ஈரான்- 11,94,963
உக்ரைன் - 10,19,876
பெரு - 10,06,318
தென்னாப்பிரிக்கா - 9,94,911