உலக செய்திகள்

உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.50 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.50 கோடியாக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

ஜெனிவா,

சீனாவில் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து இதுவரை 1 கோடியே 50 லட்சத்து 37 ஆயிரத்து 670 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 2 கோடியே 22 லட்சத்து 94 ஆயிரத்து 602 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7 லட்சத்து 83 ஆயிரத்து 429 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 64 லட்சத்து 73 ஆயிரத்து 503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 935 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு - 56,55,328, உயிரிழப்பு - 1,75,040

பிரேசில் - பாதிப்பு - 34,11,872, உயிரிழப்பு - 1,10,019

இந்தியா - பாதிப்பு - 27,66,626, உயிரிழப்பு - 53,014

ரஷியா - பாதிப்பு - 9,32,493, உயிரிழப்பு - 15,872

தென் ஆப்பிரிக்கா - பாதிப்பு - 5,92,144, உயிரிழப்பு - 12,264

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது