உலக செய்திகள்

உலக அளவில் கொரோனோ தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.70 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனோ தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.70 கோடியாக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

ஜெனிவா,

சீனாவில் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 70 லட்சத்து 75 ஆயிரத்து 707 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 2 கோடியே 46 லட்சத்து 05 ஆயிரத்து 227 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 34 ஆயிரத்து 771 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 66 லட்சத்து 94 ஆயிரத்து 749 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 531 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு - 60,46,060, உயிரிழப்பு - 1,84,777, குணமடைந்தோர் - 33,46,614

பிரேசில் - பாதிப்பு - 37,64,493, உயிரிழப்பு - 1,18,726, குணமடைந்தோர் - 29,47,250

இந்தியா - பாதிப்பு - 33,84,575, உயிரிழப்பு - 61,694, குணமடைந்தோர் - 25,83,063

ரஷியா - பாதிப்பு - 9,75,576, உயிரிழப்பு - 16,804, குணமடைந்தோர் - 7,92,561

தென் ஆப்பிரிக்கா - பாதிப்பு - 6,18,286, உயிரிழப்பு - 13,628, குணமடைந்தோர் - 5,31,338

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்