உலக செய்திகள்

உகான் நகரில் மீண்டும் கொரோனா தொற்று: 11 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை

உகான் நகரில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள 11 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பீஜிங்,

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில்தான், கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. கடந்த ஏப்ரல் 3-ம் தேதி முதல் அந்த நகரில் புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்பட வில்லை. இந்த சுழலில் 11 வார கால ஊரடங்கு கடந்த ஏப்ரல் 8ம் தேதி தளர்த்தப்பட்டது.

இந்நிலையில் உகானில் ஒரே குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 பேருக்கு அறிகுறி இன்றி நோய் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உகான் நகர் முழுவதிலும் உள்ள 11 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உகான் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் குறித்து மாவட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் இதனை 10 நாட்களில் செய்து முடிக்க காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்