உலக செய்திகள்

சீனாவின் அதிபரான பிறகு முதல் முறையாக திபெத்திற்கு சென்றுள்ள ஜி ஜின்பிங்

சீனாவின் அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக திபெத்திற்கு ஜி ஜின்பிங் சென்றுள்ளார்.

தினத்தந்தி

லாசா,

சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங், கடந்த 2011 ஆம் ஆண்டு சீனாவின் துணை அதிபராக இருந்த போது திபெத் பகுதிக்கு சென்றார். அதன் பிறகு சீனாவின் அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக தற்போது திபெத்திற்கு அவர் சென்றுள்ளார்.

பல ஆண்டுகளாக சீனாவின் சர்ச்சைக்குரிய பகுதியாக திபெத் இருந்து வருகிறது. சுயாட்சி கொண்ட பகுதியாக திபெத் அரசு அறிவித்துக் கொண்டாலும், அங்கு சீனா தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. தொன்மையான மௌத்த மத வரலாற்றை கொண்டிருக்கும் திபெத் நாட்டை, சீனா கலாச்சாரம் மற்றும் மத ரீதியாக ஒடுக்கி வருவதாகவும் திபெத்தியர்கள் சார்ப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

இது மட்டுமல்லாது திபெத் நாட்டுடனான இந்திய எல்லைப்பகுதிகளில் சமீப காலமாக இந்திய-சீன ராணுவத்தினர் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் அதிபர் ஜி ஜின்பிங் திபெத்திற்கு வருகை தந்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்