உலக செய்திகள்

பழைய வீடியோக்களை கூட எச்.டி தரத்தில் பார்க்கலாம்: யூடியூப்பில் வரும் சூப்பர் வசதி

யூடியூப் தற்போது சூப்பர் அப்டேட் ஒன்றை கொண்டு வர இருக்கிறது.

தினத்தந்தி

ஸ்மார்ட்போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக யூடியூப் செயலி உள்ளது. வீடியோக்களை பார்க்கவும் பதிவேற்றம் செய்யவும் பயன்படும் இந்த யூடியூப் ஆதிக்கம் வந்த பிறகு பலரும் டிவி பார்ப்பதையே மறந்துவிட்டனர் என சொல்லும் அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. யூடியூப்பிற்கு போட்டியாக பல வீடியோ தளங்கள் அறிமுகமானாலும், யூடியூப் இணைய உலகில் தனி சாம்ராஜ்ஜியத்தையே நடத்தி வருகிறது. பயனர்களின் வசதியை கருத்தில் கொண்டு அவ்வப்போது புதிய அப்டேட்களை யூடியூப் வழங்கி வருகிறது. அந்த வகையில், யூடியூப் தற்போது சூப்பர் அப்டேட் ஒன்றை கொண்டு வர இருக்கிறது.

அதாவது, யூடியூப்பில் உள்ள பழைய லோ குவாலிட்டி (வீடியோ தரம் குறைந்த) வீடியோக்களை ஏஐ மூலமாக ஆட்டோமேட்டிக்காக உயர்தர (HD) வீடியோக்களாக மாற்றிக்கொள்ளும் வசதியை யூடியூப் நிறுவனம் கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த புதியவசதி மூலம், 1080p என்ற தரத்துக்குக் குறைவாக பதிவிடப்பட்டுள்ள பழைய வீடியோக்கள் மற்றும் இனிமேல் பதிவிடவுள்ள புதிய வீடியோக்கள் போன்றவற்றை ஏஐ மூலமாக தரம் உயர்த்த யூடியூப் முடிவு செய்துள்ளது.

4K, HD மற்றும் அல்ட்ரா HD வரைக்கும் ஏஐ மூலமாக வீடியோக்களின் தரத்தை உயர்த்த யூடியூப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. செட்டிங்ஸ் பகுதியில் உள்ள சூப்பர் ரெசல்யூஷன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து ஒப்புதல் தெரிவித்தால், யூடியூப்பே வீடியோக்களை தானாக தரம் உயர்த்திக் கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து