கோப்புப்படம் 
உலக செய்திகள்

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி இன்று உக்ரைன் பயணம்..!!

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ஆகியோர் இன்று உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

தினத்தந்தி

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 மாதங்கள் நிறைவடைகிறது. இதனிடையே போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஐ.நா. சபை இறங்கியது. இதன்படி ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், 26-ந் தேதி மாஸ்கோ செல்ல உள்ளார். அதைத்தொடர்ந்து அவர் அதிபர் புதினுடனும், வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவுடனும் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

அதைத்தொடர்ந்து அவர் உக்ரைன் சென்று அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியையும் சந்திக்கிறார். இந்த சந்திப்புகளின்போது, போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் ஆகியோர் இன்று உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்