உலக செய்திகள்

ஜிம்பாப்வே நாட்டில் முகாபேயிடம் இருந்து கட்சி தலைவர் பதவி பறிப்பு

ஜிம்பாப்வே நாட்டில் ராபர்ட் முகாபேயிடம் இருந்து ஆளுங்கட்சி தலைவர் பதவி பறிக்கப்பட்டு விட்டது. புதிய தலைவராக முன்னாள் துணை ஜனாதிபதி மனன்காக்வா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

ஹராரே,

ஜிம்பாப்வே நாடு, இங்கிலாந்திடம் இருந்து 1980ம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற காலம் முதல், அந்த நாட்டில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்து, ஆட்சி நடத்தியவர் ராபர்ட் முகாபே (வயது 93). அவருக்கு பின்னர் அதிபர் பதவியை அடைவதற்கு துணை அதிபராக இருந்த எமர்சன் மனன்காக்வா திட்டமிட்டார்.

ஆனால், முகாபேயின் மனைவி கிரேஸ் முகாபேவும் களத்தில் குதித்தார். இந்த அதிகார போட்டியில் மனைவிக்கு ஆதரவாக செயல்பட்ட முகாபே, மனன்காக்வாவை பதவியில் இருந்து நீக்கினார். இதில் உட்கட்சி மோதல் வெடித்தது. ராணுவம் களத்தில் குதித்தது.

கடந்த 15ந் தேதி அதிபரின் அதிகாரத்தை ராணுவம் அதிரடியாக பறித்தது. அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ராணுவம், தலைநகர் ஹரேரேயில் வலம் வந்தது.

கடந்த சனிக்கிழமையன்று மக்களும் முகாபேவுக்கு எதிராக அணிவகுத்து மாபெரும் எழுச்சி பேரணி நடத்தினர்.

இந்த நிலையில் ஆளும் ஜானு பி.எப். கட்சியின் முக்கிய கூட்டம் நேற்று ஹராரே நகரில் நடந்தது. இதில் கட்சித் தலைவர் பதவியில் இருந்து முகாபே நீக்கப்பட்டார். அவரது இடத்துக்கு முன்னாள் துணை அதிபர் மனன்காக்வா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்