உலக செய்திகள்

அமெரிக்காவில் பனிப்புயலுக்கு இடையே கோர விமான விபத்து: 7 பேர் உயிரிழப்பு

ஓடுபாதையிலிருந்து கிளம்பிய அடுத்த 45 வினாடிகளில், விமானம் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விழுந்து தீப்பற்றியது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் பனிப்புயலால் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள மெய்னே மாகாணத்தில் நிலவும் கடும் பனிப்புயலுக்கு இடையே, தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கி உள்ளது.

நேற்று வெளியான தகவலின்படி, ஞாயிறு இரவு 7:45 மணியளவில், பேங்கர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தனியார் ஜெட் விமானம் புறப்பட்டது. விமானத்தில் ஊழியர்கள் உட்பட மொத்தம் 8 பேர் இருந்தனர்.

ஓடுபாதையிலிருந்து கிளம்பிய அடுத்த 45 வினாடிகளில், விமானம் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விழுந்து தீப்பற்றியது.

இந்தக் கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து நடந்த சமயத்தில் அந்தப் பகுதியில் மிகக் கடுமையான பனிப்புயல் வீசிக்கொண்டிருந்தது என்றும் மோசமான வானிலையே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. விபத்தினால் பேங்கர் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்