செய்திகள்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85,15,928 ஆக உயர்வு

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 85,15,928 ஆக உயர்ந்துள்ளது.

நியூயார்க்,

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோர தண்டவம் ஆடும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. உலக அளவில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த நிலையில், உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 85 லட்சத்தை தாண்டியுள்ளது.

உலக அளவில் இன்று மேலும் 87,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 85,15,928 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா வைரசால் இன்று 3,099 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை தற்போது 4,53,551 ஆக உயர்ந்துள்ளது கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 44,88,974 பேர் குணமடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும் (பாதிப்பு - 22,47,456 பேர், உயிரிழப்பு - 1,20,256 பேர்) இரண்டாவது இடத்தில் பிரேசிலும் (பாதிப்பு - 9,65,512 பேர், உயிரிழப்பு - 46,842 பேர்), மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும் (பாதிப்பு - 5,61,091 பேர், உயிரிழப்பு - 7,660 பேர்) உள்ளன. இந்தப்பட்டியலில் இந்தியா 4 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்