செய்திகள்

வயலோகம், காரையூர் முத்துமாரியம்மன் கோவில்களில் பூச்சொரிதல் விழா

வயலோகம், காரையூர் முத்துமாரியம்மன் கோவில்களில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

அன்னவாசல்,

அன்னவாசல் அருகே வயலோகம் கிராமத்தில் முத்துமாரிமய்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதையொட்டி வயலோகத்தை சுற்றியுள்ள குடுமியான்மலை, குளவாய்ப்பட்டி, காட்டுப்பட்டி புதூர், அகரப்பட்டி, தச்சம்பட்டி, முதலிப்பட்டி, விசலூர், மாங்குடி, புல்வயல், மண்வேளாம்பட்டி உள்பட பல கிராமங்களில் இருந்து பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பூக்களை கொட்டி ஊர்வலமாகவும், கைகளில் பூக்களை தட்டுகளில் எடுத்தும் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மன் பாதத்தில் பூக்களை கொட்டி வழிபட்டனர். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

காரையூர்

காரையூரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதற்கு காரையூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பூத்தட்டுகள், பால் குடம், முளைப்பாரி எடுத்து மேள தாளத்துடன் பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். பூச் சொரிதலுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் மண்டகப்படி தாரர்கள் செய்திருந்தனர். இதில் காரையூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூர் போலீசார் செய்திருந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்