செய்திகள்

பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்காததால் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை

புதுக்கடை அருகே பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்காததால் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

புதுக்கடை,


புதுக்கடை அருகே உள்ள வெட்டுவிளை கிள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் சுவாமிதாஸ். இவரது மகன் அனி (வயது 18). இவர் 10ம் வகுப்பு படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். இவர் தனது பெற்றோரிடம் மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் டிரைவிங் லைசென்ஸ் வாங்கிய பின்னர் வாங்கித் தருவதாக கூறி மறுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த சிலநாட்களாக அனி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

விஷம் குடித்தார்


இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அனியை மீட்டு அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் அனி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்காததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்