அஜித்குமார் இனிமேல் தனது படங்களில், 'பஞ்ச்' வசனங்கள் பேசுவதில்லை என்று முடிவு செய்து இருக்கிறார். குறிப்பாக, அரசியல் பஞ்ச் வசனங்களை வைக்க வேண்டாம் என்று டைரக்டர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படத்துக்கு இன்னும் பெயர் முடிவாகவில்லை. எச்.வினோத் டைரக்டு செய்கிறார். போனிகபூர் தயாரிக்கிறார்.