மாவட்ட செய்திகள்

மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநில வாலிபர் பலி

6-வது மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநில வாலிபர் இறந்தார்.

அரியலூர்:

மருத்துவ கல்லூரி கட்டிட பணி

அரியலூரில் அரசு மருத்துவ கல்லூரி கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் வடமாநிலங்களை சேர்ந்த பலர் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கல்லூரி கட்டிடத்தின் 6-வது மாடியில் பலர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் தவறி 6-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சாவு

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபர் மேற்குவங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம் பட்டுகானாபுதூர் கிராமத்தை சேர்ந்த மிந்து மண்டல் (வயது 22) என்பது தெரியவந்தது. இதுபற்றி அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.