புதுச்சேரி

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்சினி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்சினி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 9ஆம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து