பெங்களூரு

என்.எஸ்.எஸ். அமைப்பில் கூடுதலாக 42,800 பேரை சேர்க்க மத்திய அரசு அனுமதி; மந்திரி நாராயண கவுடா தகவல்

என்.எஸ்.எஸ். அமைப்பில் கூடுதலாக 42,800 பேரை சேர்க்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மந்திரி நாராயண கவுடா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு:

கர்நாடக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் தேசிய சேவை திட்டத்தில் (என்.எஸ்.எஸ்.) இதுவரை 2 லட்சத்து 78 ஆயிரத்து 200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த திட்டத்தில் கூடுதல் உறுப்பினர்களை சேர்க்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டு இருந்தோம். இதை ஏற்று மேலும் 42 ஆயிரத்து 800 பேரை உறுப்பினர்களாக சேர்க்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் தேசிய சேவை திட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 21 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்த கூடுதல் உறுப்பினர்களின் செலவுகளை கையாள ரூ.10 கோடி நிதியும் ஒதுக்கி இருக்கிறது. கர்நாடகத்திற்கு மொத்தம் ரூ.24.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் இந்த தேசிய சேவை திட்ட உறுப்பினர்கள் சமூக பணிகளை செய்து வருகிறார்கள். கூடுதல் உறுப்பினர்களை சேர்க்க அனுமதி கிடைத்து இருப்பதால் இன்னும் அதிகமான சமூக சேவைகளை ஆற்ற முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு